தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்தவர் ஜெயலலிதா என கூறியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர் பாலு எம்பி, பாஜக ஆட்சியைக் கவிழ்த்தவர் ஜெயலலிதா. ஊழல் வழக்கில் தண்டனை பெற்று 2 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டவர் ஜெயலலிதா.

4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் பெங்களூரு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஜெயலலிதா, தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியைக் கொடுத்ததாகப் பிரதமர் மோடி பேசியிருப்பதைப் பார்த்துத் தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கிறார்கள் என   கூறியுள்ளார்.