வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நேற்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கிய நிலையில் திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரி நிரம்பியது. இதைத்தொடர்ந்து தற்போது சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியும் முழு கொள்ளளவை அடைந்து விட்டது. இதன் காரணமாக இன்று காலை 8 மணி அளவில் செம்பரம்பாக்கம் ஏரியல் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக நீர்வளதுறையும் மாவட்ட ஆட்சியரும் அறிவித்துள்ளனர்.
பூண்டி ஏரியில் நேற்று 5000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 16,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.