கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் சாலை விபத்தில் 12,032 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2021ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 10,373 ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டு கணிசமான அளவு மரணங்கள் அதிகரித்துள்ளன. தமிழக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஆண்டு மொத்தம் 17,473 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் தமிழக சாலைகளில் 15.9 சதவீதமும், தேசிய நெடுஞ்சாலைகளில் 9.3% விபத்துகள் நடந்துள்ளன.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் குண்டும் குழியுமான மோசமான ரோடு, முறையான சாலை பராமரிப்பின்மை போன்றவையே காரணம். சாகசம் என்ற பெயரில் இன்றைய காலத்து இளைஞர்கள் அதிவேகமாக பயணம் செய்வது ஆபத்தில் முடிந்துள்ளது. இது போன்ற விபத்துகளால் பலர் தங்களுடைய கை, கால்களை இழக்கின்றார்கள். பலர் வீட்டுக்குள்ளே முடங்கும் அளவிற்கு காயங்கள் ஏற்படுகின்றது என்று தமிழக போக்குவரத்து துறை பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டது