நேபாளத்தை உலுக்கிய கோர வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு, மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், நேபாள ராணுவ வீரர்கள் மீட்கப்பட்ட இரட்டைக் குழந்தைகளை அரவணைத்து ஆறுதல்படுத்தும் நெகிழ்ச்சியான காட்சிகள் வெளியாகி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளன. நேபாளம் மற்றும் சீனப் பகுதிகளில் பரவியுள்ள இந்த இயற்கைப் பேரிடருக்கு இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை. சாலைகளும் பாலங்களும் துண்டிக்கப்பட்டுள்ளதால், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பனிப்பாறைச் சரிவும் திடீர் வெள்ளப் பெருக்குக் காரணமும்நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ள லெண்டே துணை நதியில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு அல்லது பனிச்சரிவு காரணமாக இந்த திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் போதேகோஷி நதிப் பகுதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, திமுரே உள்ளிட்ட குடியிருப்புகளை ஆதி வெள்ளம் அடித்துச் சென்றது. இந்தியா – சீனா எல்லைப் பகுதியையும் பாதித்துள்ள இந்த வெள்ளத்தில், ஏராளமான சாலைகள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.
VIDEO | Nepal floods: Rescued twin children comforted by Nepal Army personnel amid ongoing relief operations. pic.twitter.com/12fLMnjS0f
— Press Trust of India (@PTI_News) August 27, 2026
ஹெலிகாப்டர்கள் மூலம் தொடரும் மீட்புப் பணிகள்வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல வழியில்லாததால், நேபாள ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் மூலம் சிக்கியிருக்கும் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். ரசுவா பகுதியின் திமுரே கிராமத்தில் இருந்து 94 நேபாளிகள் மற்றும் 29 வெளிநாட்டினர் உள்பட 123 பேர் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ரேடியோ நேபாளம் தெரிவித்துள்ளது. சேதமடைந்த சாலைகள் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களை அடைய ஹெலிகாப்டர்கள் மட்டுமே முக்கிய வழியாக மாறியுள்ளன.
உயிரிழப்பும் தேடுதல் வேட்டையும்உடல்களை மீட்கும் பணியும், தேடுதல் வேட்டையும் தொடர்ந்து விரிவுபடுத்தப்படுவதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, நேபாளம் மற்றும் சீனாவில் குறைந்தது 359 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இ
