ஒரு தொழிலை தொடங்கி அதனை வெற்றிகரமாக நடத்துவது என்பது மலையை கட்டி இழுப்பதற்கு சமம். ஆனால் பெரும்பாலான நிறுவனங்களின் வர்த்தகம் சில தலைமுறைகளை கூட தாண்ட முடியாமல் முடிவுக்கு வந்து விடுகின்றன. ஆனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 40 தலைமுறையினர் 1,445 ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இந்த நிறுவனம் நம்ம நாட்டில் இல்லை உழைப்பாளிகளுக்கு பெயர் பெற்ற ஜப்பானில் உள்ளது.
ஜப்பானின் பாரம்பரிய கட்டுமான நிறுவனமான கொங்கோ குமி kongo Kumi co.Ltd. உலகின் மிகவும் பழமையான நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ளது. கிபி 578 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் 2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் புதிய பரிணாமத்தில் வேறு பெயரில் தொடர்ந்து இயங்கி வருகின்றது. 1400 ஆண்டுகள் இயங்கிக் கொண்டே இருப்பதன் ரகசியம், உங்களின் தனித்திறமையை கண்டறிந்தால் அதை ஒருபோதும் விட்டு விடாதீர் என அது குறிப்பிட்டுள்ளது.