ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் ராமாயண நாடகம் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தின் போது அரக்கன் வேடமிட்ட நடிகர் ஒருவர் உயிருள்ள பன்றியை கொன்றுள்ளார். அதன்பிறகு மேடையிலேயே அந்த பன்றியின் இறைச்சியை சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.

இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை கைது செய்தனர். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை மீறியது, விலங்குகளை கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.