ஆந்திராவில் மே 13 மக்களவை மற்றும் சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தார்சி சட்டசபை தொகுதியில், தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கோதிபதி லட்சுமி என்ற பெண் மருத்துவர் வேட்பாளராக களமிறங்குகிறார். கர்ப்பிணி ஒருவர் தனியார் மருத்துவமனையில் அபாய கட்டத்தில் இருப்பதாக லட்சுமிக்கு தகவல் கிடைத்த நிலையில் அங்கு சென்ற அவர் அந்த பெண்ணிற்கு வெற்றிகரமாக பிரசவம் பார்த்து தாயையும், குழந்தையையும் காப்பாற்றினார்.