![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/12/ch1790535.jpg)
டெல்லி வசந்த் விகார் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வந்த சிறுவன் திடீரென மயங்கி விழுந்ததாக பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அங்கு சிறுவனின் சடலத்தை கொடுத்துள்ளனர். மகனின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.
அப்போது மருத்துவமனைக்கு சென்றபோது பள்ளி சார்பில் அங்கு யாரும் இல்லை என்றும் ஆசிரியர்கள் தனது மகன் குறித்து கூறும்போது மயங்கி விழுந்ததாகவும், படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததாகவும், சக மாணவருடன் சண்டையிடும் போது மயங்கியதாகவும் வெவ்வேறு காரணங்கள் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பள்ளி குழந்தைகளின் பெற்றோர் பள்ளியின் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.