உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடத்துக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞா்களை பரிசீலிக்கக்கூடாது என வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி தள்ளுபடி செய்த நீதிபதிகள் மனுதாரருக்கு ரூபாய். 50,000 அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தனர். அதாவது, வழக்கறிஞர் அசோக் பாண்டே என்பவா் சாா்பாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
அவற்றில் “உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடா்பான நிபந்தனைகளை குறிப்பிடும் அரசமைப்பு சட்டப் பிரிவு 217ல் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கத்தின் படி, மாநில வழக்கறிஞர் சங்கத்தில்(பாா்) வழக்கறிஞராக பதிவு செய்து பிறகு, உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞா் பணியை தொடா்ந்து வருவோா் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட தகுதியற்றவா்கள் என கூறுகிறது. ஆகவே இத்தகைய வழக்கறிஞா்களை உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கு கருத்தில் கொள்ளக்கூடாது என உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.