விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொறியியல் பட்டதாரி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரை ராஜசேகர் சென்னையில் இருக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தனக்கு திருமணம் தள்ளி போவதை நினைத்து ராஜசேகர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

நேற்று திடீரென வாழை தோப்பில் வைத்து ராஜசேகர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று ராஜசேகரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.