பொதுவாக காதலர்களுக்கிடையே பல்வேறு விதமான பிரச்சினைகள் வரலாம். இந்த பிரச்சனைகள் சில சமயங்களில் விபரீதமாக மாறவும் வாய்ப்புகள் இருக்கும். இது குறித்த செய்திகள் கூட வெளிவந்துள்ளது. அந்த வகையில் தற்போது வெளிவந்த ஒரு செய்தி மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது தன்னுடைய காதலியின் புதிய ஹேர் ஸ்டைல் பிடிக்காததால் அவரை காதலன் கொலை செய்துவிட்டார். அதாவது பென்சில்வேனி யாவில் பெஞ்சமின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 49 வயது ஆகிறது. இவர் 50 வயதான கார்மென் மார்டினெஸ் சில்வா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் அவர் புதியதாக முடி திருத்தம் செய்துள்ளார்.
இது அவருடைய காதலனுக்கு பிடிக்காததால் பயந்து போனவர் தன் மகளின் வீட்டில் தங்கினார். இருப்பினும் தன் மகள் வீட்டில் இருக்க அவர் பயந்துவிட்டு தன் சகோதரனின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர் தன் அண்ணனிடம் பெஞ்சமினுடான உறவு முடிந்து விட்டதாக சென்று கூறுமாறு கூறியுள்ளார். இதனை ஒரு நண்பர் மூலமாக அவர்கள் சொன்ன நிலையில் ஆத்திரமடைந்த பெஞ்சமின் அங்கு சென்று தன் காதலியை குத்தி கொலை செய்தார். இதனை தடுக்க வந்த அவருடைய அண்ணனையும் கத்தியால் குத்தினார். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பெஞ்சமினை கைது செய்துள்ளனர்.