ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக 90 வயதான தாயையும் 62 வயதான சகோதரியையும் கொன்றுஎரித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்பல்பூர் சதார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹடபாடா பகுதியில் நேற்று இரவு 10.30 மணியளவில் மக்கள் தகவல் அளித்ததின் அடிப்படையில், 90 வயதான சினேகலதா தீட்சித் மற்றும் அவரது மகள் ஷைரேந்திர தீட்சித் ஆகியோர் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

ஆரம்பத்தில் இயற்கை மரணம் என கருதப்பட்ட இந்த சம்பவம், பின்னர் காவல்துறையின் விசாரணையில் கொலை என்று உறுதி செய்யப்பட்டது. சொத்து தகராறில் தாயையும் சகோதரியையும் கொலை செய்து, பின்னர் தீ வைத்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முதலில் இரண்டு பெண்களின் கழுத்தை நெரித்து கொன்று, பின்னர் அவர்களின் உடலை எரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தாயின் மகன் ஜெகநாத் மற்றும் அவரது மகன் சங்கேத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.