சென்னை எம்.ஜி.ஆர் நகர் அருகே ஆதிலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். கணவர் இறந்த பின்பு தனது மகளின் பராமரிப்பில் இருந்தார். ஆதிலட்சுமிக்கு சொந்த வீடு மற்றும் கடைகள் உள்ளது. அவற்றை தாய் பிரித்துக் கொடுக்க வேண்டும் என மூத்த மகள் திரிலோகசுந்தரி அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
சம்பவத்தின் இரவு, ஆதிலட்சுமி வீட்டின் அருகில் சாலையோரமாக அமர்ந்து இருந்தபோது, திரிலோகசுந்தரி மோட்டார் சைக்கிளில் வந்தார். கயிற்றால் கழுத்தை இறுக்கி, ஆதிலட்சுமியை சாலையில் இழுத்து சென்று கடுமையான தாக்கியுள்ளார். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாய் மகளுக்கிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக தாங்கள் எதுவும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டதாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலின் பின்பு காயமடைந்த ஆதிலட்சுமி, கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் இப்போது அவரது இரண்டாவது மகள் மற்றும் உறவினர்கள் இருக்கின்றனர். சிசிடிவி காட்சிகள் வெளியானதற்குப் பிறகு, எம்.ஜி.ஆர் நகர் காவல்துறையினர் ஆதிலட்சுமியின் புகாரின் அடிப்படையில் திருலோகசுந்தரியை கைது செய்தனர்.