நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. விஜய் அரசியல் கட்சிகளை நேரடியாக விமர்சித்து பேசினார். அவரது பேச்சுக்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அவர் திமுக மற்றும் பாஜக கட்சியை கடுமையாக விமர்சித்தார். ஆனால் அதிமுக கட்சியை விமர்சனம் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் மக்களுக்கு நல்லது செய்ததால் தான் விஜய் விமர்சிக்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே கூறியுள்ளார்.
2026-வது தேர்தலில் கூட்டணி குறித்தும் திட்டமிடுவதாக தெரிகிறது. இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் அளித்த பேட்டியில் கூறியதாவது, தனிமரம் தோப்பாகாது. எடப்பாடி பழனிச்சாமி எப்போதும் பகல் கனவு கண்டு கொண்டு இருப்பவர். அவருடன் கூட்டணி போவதற்கு யாரும் தயாராக இல்லை. தேமுதிக மட்டும் தான் உள்ளது. அவர்கள் கழன்று விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.