பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ராஜலட்சுமி. இந்த நிகழ்ச்சியில் இவரும் இவருடைய கணவர் செந்தில் கணேஷ்  பல பாடல்களை பாடி ரசிகர்களை பிரமிக்க வைத்தார்கள். அதன் பிறகு பல படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் ஹீரோயின் ஆகவும் அறிமுகம் ஆகி உள்ளார். இந்த படத்தில் ராதாரவி, என் ஜீவானந்தம், விஜய் பாரத்,  பழ கருப்பையா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் வெளிநாட்டில் இசை கச்சேரிக்காக சென்றிருந்த ராஜலட்சுமி நபர் ஒருவரோடு ஆங்கிலத்தில் உரையாடியதோடு அதற்கான காணொளியையும் வெளியிட்டிருந்தார். மேலும் அதில் ராஜலட்சுமி மாடல் உடை அணிந்து இருந்தார். இதனை பார்த்த இணையவாசிகள் மோசமான கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள். இந்நிலையில் இதுகுறித்து பேசிய ராஜலட்சுமி ஆங்கிலத்தை நமக்குள்ளே பேசினால் தவறுகள் தெரியாது.

அதனால் ஆங்கிலத்தில் பேசி வீடியோ போட்டேன். நான் பேசியதை மட்டும் அல்லாமல் அணிந்திருந்த ஆடை குறித்து மோசமாக கருத்து தெரிவித்துள்ளார்கள். அடிப்படை அறிவு இல்லாதவர்கள் தான் இப்படி செய்வார்கள். எனக்கு இது சரியோ அதை நான் போடுகிறேன். எனக்கு என்று ஒரு சுய ஒழுக்கம் இருக்கு அதை நான் கடைபிடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.