ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை…. மருத்துவ அறிக்கை வெளியானது….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. XBB வகைகொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுவதாகவும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இளங்கோவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இளங்கோவன் நலமுடன் இருப்பதாகவும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதய பாதிப்பிற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது. உடல் நலம் தேறியுள்ள இளங்கோவன் விரைவில் சட்டமன்ற பணிகளுக்கு திரும்ப ஆர்வமுடன் இருப்பதாக சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.