ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பிப்.,27-ந் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட இதுவரை மொத்தம் 67 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இபிஎஸ் தரப்பு அதிமுகவினர் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.