கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிஷோர் (15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி அன்று பள்ளியில் ஈட்டியெறிதல் பயிற்சி நடைபெற்றது. அப்போது  கிஷோரின் தலையில் எதிர்பாராத விதமாக ஈட்டி பாய்ந்தது. இதைத்தொடர்ந்து கிஷோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் கடந்த 30 ஆம் தேதி மூளை சாவின் காரணமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இந்த செய்தி எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரக்கங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு  3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.