மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது. அதாவது மொத்த விலையில் 25 ஆயிரம் ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் தொகையை மானியமாக வழங்கப்படும். இருசக்கர வாகனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கியர் இல்லாத, தானியங்கி கியர் மற்றும் 125சிசி சக்திக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் வஃக்பு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 5 வருடங்கள் பணியாற்று இருக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆகவும் 18 முதல் 45 வயது உடையவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டை,வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மானிய விலை இரு சக்கர வாகனம் பெறுவதற்கு விருப்பம் உள்ள உலமாக்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.