உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியை நிர்வாகி ஜெய்சிங். இவர் வெளியிட்ட ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் 50 வயதுடைய தந்தையை 25 வயதுடைய மகள் திருமணம் செய்துள்ளார். அந்தப் பெண் கூறும்போது இவர் என்னுடைய தந்தை. இவர்தான் என்னுடைய கணவர். இவரைத்தான் நான் திருமணம் செய்துள்ளேன். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இருப்பினும் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு தற்போது நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறப்படுகிறது. இது நகைச்சுவைக்காக எடுக்கப்பட்ட வீடியோ அல்லது டிக் டாக் செயலியில் லைக் வாங்குவதற்காக எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறப்படுகிறது. ஆனால் இதன் உண்மை தன்மை என்னவென்று தெரியவில்லை. மேலும் இந்த வீடியோவை தற்போது ஜெய்சிங் வெளியிட்ட நிலையில் சமூக வலைதளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.