திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது உன்னதமான நினைவுகளை நான் நினைவு கூறுகிறேன். பன்முகத் திறமைகள் கொண்ட அவரது கருத்துகள் அனைத்து தரப்பு மக்களிடையும் ஊக்கத்தை ஏற்படுத்துகிறது. இளைஞர்கள் அனைவரும் திருக்குறளை படிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். மேலும் திருக்குறளை படிப்பதன் மூலம் குறள்  மிகவும் நுட்பம் வாய்ந்தது என்பதை அவர்கள் உணர்வார்கள் என்று பதிவிட்டுள்ளார்.