சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது  செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார். குறிப்பாக பெண்களுக்கு மாதம் 1000 உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற இருக்கிறது. தலைமை செயலகத்தில் நடைபெறவிருக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதுகுறித்த அறிவிப்பு நாளையே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது