புதுச்சேரியில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வு தேர்வில் மறைந்த காவலர் மகன் 500க்கு 494 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார்.

புதுச்சேரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் புதுச்சேரியில் உள்ள அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மாணவன் கிருஷாந்த் அபினவ் 500க்கு 497 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

அவரை தொடர்ந்து புதுச்சேரி காவல் துறையில் பணியாற்றி வந்த காவலர் அசோக் குமார்  என்பவர் கடந்த நவம்பர் மாதம் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது மகன் லோக சந்தர் 500 க்கு 494 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவர், தனது தந்தையின் ஆசைப்படி நிச்சயம் ஐஏஎஸ் படித்து வெற்றி பெறுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் எனது தேர்வு முடிவை பார்த்து சந்தோஷப்பட என் அப்பா இல்லை என வேதனையுடன் தெரிவித்தார்.