தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அஞ்சலி. இவர் விளம்பரங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007 ஆம் வருடம் கற்றது தமிழ் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலககுக்கு அறிமுகமானார். ஆனந்தி எனும் வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகையாக தென்மண்டல பிலிம் பேர் விருது கிடைத்தது.

இதனை அடுத்து அங்காடித்தெரு எனும் திரைப்படத்தில் கனியாக நடித்து அந்த வருடத்தின் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து பல படங்கள் நடித்திருந்தார் இந்த நிலையில் ”பெண்களை மதிக்கத்தெரிந்த ஒருவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்” என நடிகை அஞ்சலி தெரிவித்தார். ராம் இயக்கிய கற்றது தமிழ் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. இந்த நிலையில், அவர் தனது திருமணம் குறித்து பேசினார். “திருமணம் முடிந்த பிறகும் தன்னை மரியாதையாக நடத்தும் நபராக இருக்க வேண்டும். இதற்குப் பிறகுதான் அன்பு, காதல் எல்லாம். அப்படி ஒரு பையன் கிடைக்கட்டும்” எனக் கூறினார்.