ஏராளமானோருக்கு மிகவும் பிடித்தமான சமூகவலைதளமாக இன்ஸ்டாகிராம் மாறியிருக்கிறது. இன்ஸ்டாகிராம் கணக்கை தற்காலிகமாக (அ) நிரந்தரமாக டெலிட் செய்வது எப்படி என்பது குறித்து நாம் தற்போது தெரிந்துக்கொள்வோம். இதனிடையே இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் டெலிட் செய்யும்போது, நீங்கள் பதிவிட்ட போட்டோ, வீடியோ, உங்களை பின் தொடர்பவர்கள் என அனைத்தும் அழிந்துவிடும்.

இதனால் டெலிட் செய்வதற்கு முன் உங்கள் இன்ஸ்டாவில் உள்ள தகவல்களை பாதுகாப்பாக பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும். இதையடுத்து இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ நிரந்தரமாக டெலிட் செய்ய முதலில் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் Login செய்யவும். அவற்றில் account deletion பக்கத்துக்கு சென்று அக்கவுண்ட் டெலிட் செய்வதற்குரிய காரணத்தை தேர்வு செய்யவும். பிறகு பாஸ்வேர்ட் பதிவு செய்து டெலிட் ஆப்ஷன் கொடுக்க வேண்டும்.

அதன்பின் அக்கவுண்ட்-ஐ தற்காலிகமாக டி-ஆக்டிவேட் செய்வது எப்படி என்பது குறித்து நாம் தற்போது தெரிந்துக்கொள்வோம். இதற்கு இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் லாக்கின் செய்யவும். அதனை தொடர்ந்து Profile போட்டோவிற்குள் சென்று “Edit Profile” ஆப்ஷன் கிளிக் செய்யவும். Scroll செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Temporarily disable my account-ஐ கிளிக் செய்யவும். அதனை கொடுத்தால் தற்காலிகமாக டி-ஆக்டிவேட் செய்வதற்குரிய காரணங்கள் கேட்டக்கப்படும். அதில் காரணத்தை தேர்வு செய்து, மீண்டுமாக பாஸ்வேர்ட் பதிவுசெய்யவும்.