நொடிப்பொழுதில் நண்பர்களுக்கு செய்திகளை அனுப்ப உதவும் வாட்ஸ்அப் செயலியில் பல வசதிகளையும், மாற்றங்களையும் அண்மை காலமாக மெட்டா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி வாட்ஸ்அப் சாட் செய்வதையும், எமோஜிகளோடு நகைச்சுவையாக உரையாடுவதற்கு ஏற்ற அடிப்படையில் 2 புது அப்டேட்களை மெட்டா குழுமத்தின் WhatsApp நிறுவனம் வழங்கி உள்ளது.

வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தி இருக்கும் புது அப்டேட்டின் படி, பயனர்கள் கீபோர்டை மேல்நோக்கி ஸ்க்ரால் செய்துக்கொண்டு டைப் செய்யும் போது, கீ போர்ட் சற்று பெரியதாக கிடைக்கும். இதன் வாயிலாக நீங்கள் வழக்கத்தை விட மிகவும் வேகமாகவும், பிழையின்றியும் டைப் செய்வதற்கு உதவும். அதோடு புதிய அப்பேட்டில் வாட்ஸ் அப் எமோஜிக்கள், GIF, ஸ்டிக்கர் மற்றும் அவதார் பிரிவுகளும் மேல் கீபோர்டின் மேல் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

முன்பாக இந்த வசதிகள் வாட்ஸ்அப்-ல் கீழ் பகுதியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய தகவலின் அடிப்படையில் வாட்ஸ்அப்-ன் புது கீபோர்டு வசதியானது, ஆன்ட்ராய்ட் போன்களில் 2.23.12.19 வெர்ஷனிலும், ஐபோன் பயனர்களுக்கு ios பீட்டா பதிப்பு 23.12.0.70 எனும் வெர்ஷனிலும் கிடைக்கப் பெறும். ஒரு வேளை உங்களுக்கு எதிர் காலத்தில் புது அப்டேட் கிடைக்கவில்லை எனில், ஆப் ஸ்டோர் மற்றும் Test Flight ஆப்களிலிருந்து உங்களது வாட்ஸ்அப்-ஐ தவறாமல் புதுப்பித்துக்கொள்ளவும்.