ஆடி மாதம் என்பதால் நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை வீழ்ச்சி அடைந்து வருகின்றது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கறிக்கோழி உயிருடன் விலை 20 ரூபாய் குறைந்து 95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ கோழி இறைச்சி 160 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 4.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சில்லறை விற்பனையில் ஒரு முட்டை 5.20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.