சென்னை நந்தனம் பகுதியில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு ‌ விழா நடைபெறும் நிலையில் விஜய் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் நிகழ்ச்சியில் பேசிய விஜய் கூறியதாவது, அம்பேத்கர் படிச்ச டாக்டர் பட்டம் வாங்கி ஒரு வழக்கறிஞராக இந்தியாவுக்கு திரும்ப வராரு. மும்பைக்கு பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்துக்கு அவரை கூப்பிடறாங்க. அவர் மதிப்புமிக்க அரசு அதிகாரியா இருக்காரு. அப்போ கிராமத்துக்காரங்க ஒரு வண்டியை ஏற்பாடு பண்ணி இருக்காங்க. அந்த வண்டிய ஓட்டுபவர் அவருக்கு சமமா உட்கார்ந்து வண்டி ஓட்டுவதற்கு மறுக்கிறார். லண்டனுக்கு போய் பட்டம் வாங்கிய அம்பேத்கரை விட ஒரு வண்டி ஓட்டுகிறவர் தன்னை உயர்ந்தவரா நினைக்கிறாரு. அந்த சமூக கொடுமை தான் அவரை சமத்துவத்துக்காக போராட வெச்சது.

இன்றைக்கு  திரு அம்பேத்கர் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் என்ன நினைப்பாரு? இன்னைக்கு இருக்கிற இந்தியாவைப் பார்த்து அவர் பெருமைப்படுவாரா? இல்ல வருத்தப்படுவாரா? அப்படியே வருத்தப்பட்டால் எதை நினைத்து வருத்தப்படுவாரு. இன்னைக்கு நம்ம நாடு முழு வளர்ச்சியை அடையனும்னா ஜனநாயகம் காக்கப்படனும். ஜனநாயகம் காக்கப்படனும்னா அரசியலமைப்பு சட்டம் காக்கப்படணும். அதுக்கான பொறுப்பு கடமை நம்ம ஒவ்வொருத்தர் கிட்டயும் இருக்கனும்னு தோணுச்சு. அந்த பொறுப்போடும் அந்த கடமையோடும் தான் நான் ஆணித்தனமா சொல்றேன்.

ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல். நியாயமா நடக்கலன்னு நான் சொல்ல வரல. ஆனா சுதந்திரமாகவும், நியாயமாகத்தான் தேர்தல் நடக்குது அப்படின்னு அசைக்க முடியாத நம்பிக்கை ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கணும்னு தோணுச்சு. அது அமையனும்னா தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்து அடிப்படையில் மட்டும் தான் நியமிக்க படணும், அப்படிங்கறது என்னோட வலிமையான கோரிக்கை. இரண்டாவது ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை இந்தியாவின் ஜனநாயக உரிமைகள் தினமா அறிவிக்கணும், அப்படிங்கறது என்னோட தாழ்மையான வேண்டுகோள்  என கூறியுள்ளார்.