சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை குறைக்கும் நோக்கத்தில் விபத்து ஏற்பட்டதிலிருந்து 48 மணி நேரம் வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் முறையிலான இன்னுயிர் காப்போம் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அந்த வகையில் சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை செலவை அரசே  ஏற்று கொள்கிறது. இதில் மொத்தம் 609 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 1 லட்சத்து 41 ஆயிரத்து 128 பேர் பயன் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்ட வரும் 1 லட்சத்து 28 ஆயிரத்து 79 பேருக்கு இதுவரை ரூபாய் 102. 87 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 13,049 பேருக்கு ரூ.21.94 கோடி மதிப்பிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது என மக்கள் நல வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.