இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.

இது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்றும் நவம்பர் இரண்டாம் வாரத்தில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் அதிதிவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இன்று தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி‌ சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இதேபோன்று நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.