உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐஒஎஸ் பயனர்களுக்காக whatsapp, ஸ்டேட்டஸ் அப்டேட் ஒரு நிமிடம் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது வரை முப்பது வினாடிகள் மட்டுமே வீடியோக்களை நிலையாக பதிவேற்ற முடியும். ஆனால் இனி ஒரு நிமிடம் வரை வீடியோக்களை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இல் பதிவேற்றலாம். இந்த புதிய அம்சம் தற்போது சில பீட்டா சோதனையாளர்களுக்கு கிடைக்கும் எனவும் விரைவில் மற்றவர்களுக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொழில் நுட்ப அம்சங்களை நிறுவனம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது.