பஞ்சாப் மாநில அரசு புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு அம்மாநிலத்தில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் வருவாய் துறை அதிகாரிகள் யாரும் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்து பணிக்கு வரக்கூடாது என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் இந்த கட்டுப்பாடு களப்பணித்து செல்பவருக்கு பொருந்தாது. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்ததால் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு டிஜிட்டல் வருகை பதிவேடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடும் குளிரின் காரணமாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு வருகிற 9-ம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடும் குளிரின் காரணமாக பள்ளிகளுக்கும் விடுமுறையானது ஜனவரி 9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.