இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பல உதவிகளை வழங்குகின்றன. வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கு மானிய விலையிலும் இலவசமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக பொருட்கள் சென்றடைவதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. இதனை தவிர்ப்பதற்காக உத்திரபிரதேச மாநில அரசு EWS என்ற மின் எடை அளவு முறையை அறிமுகம் செய்துள்ளது.

இந்த சாப்ட்வேரில் ரேஷன் அட்டைதாரர்களின் நிர்ணயிக்கப்பட்ட அளவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டு அவை எடை இயந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய கைவிரலை பதிவு செய்தவுடன் அந்த ரேஷன் அட்டைதாரருக்கான அளவுகள் கணக்கிடப்பட்டு மின் எடை அளவீடு கருவி மூலமாக கணக்கிட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ரேஷன் கடைகளில் ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபட முடியாது என அரசு தெரிவித்துள்ளது.