டெல்லியில் அண்மை காலமாகவே காற்றின்தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. எனவே  காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே பைக் டாக்சிகளாக அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஓலா மற்றும் உபெரின் கீழ் இனி மின்சார வாகனங்கள் மட்டுமே பைக் டாக்சிகள் அல்லது வாடகை பைக்குகளாக இயக்க அனுமதிக்கப்படும் என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இந்த மோட்டார் வாகன ஒருங்கிணைப்பு திட்டம்-2023க்கு முதல்வர் கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளார்.