மத்திய ஆசிய நாடு தஜிகிஸ்தான். இந்த நாட்டில் பெண்கள் பர்தா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு முக்கிய பண்டிகைகள் சிலவற்றையும் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அரசு விதிமுறைகளை மீறும் அரசு அதிகாரிகளுக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று விதிகளை மீறும் மதத் தலைவர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் கடந்த 2007 ஆம் ஆண்டு மேற்கத்திய மினி ஸ்கர்ட் மற்றும் ஹிஜாப் போன்றவைகளுக்கு பள்ளிகளில் தடை விதித்தது.

இதைத்தொடர்ந்து தற்போது நாட்டில் மொத்தமாக ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் ஒரு கோடி மக்கள் வசூலிக்கும் நிலையில் அதில் 96 சதவீதம் இஸ்லாமியர்கள் வசித்து வருகிறார்கள். மேலும் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் தஜிகிஸ்தான் நாட்டில் தற்போது பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இதே போன்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், அர்பைஜான் மற்றும் கொசோவா ஆகிய நாடுகளிலும் பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.