சார் பதிவாளர் அலுவலகங்களில் நேரடி பணப் பரிவர்த்தனை ஏதும் நடைபெறாது என்பதால் இனி பதிவுக்காக வருவோர் பணம் கொண்டு வரத் தேவையில்லை என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சார் பதிவாளர் அலுவலகங்கள் முழுவதும் கணினி மயம் ஆக்கப்பட்டு விட்டதால் முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்து நேரத்தை மிச்சப்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

100 ரூபாய் கூட ரொக்கமாக பெறப்படாது என்று அமைச்சர் கூறியிருக்கிறார். வணிகவரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறையில் 39 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வணிகர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.