நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக எதிர்கால நலனை கருதி கடந்த சில ஆண்டுகளாக எலக்ட்ரிக் வாகன உற்பத்தி அதிகரித்து வருகிறது. மத்திய அரசு எலக்ட்ரிக் வாகன ஊக்குவிப்பு திட்டம் 2024 என்ற புதிய திட்டத்தை நேற்று தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக ஜூலை மாதம் இறுதி வரை 500 கோடி மதிப்பில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானிய தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு 3.33 லட்சம் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு மானிய தொகை வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கனரக  தொழில்துறை அமைச்சகத்தின் திட்ட மூலம் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு ஊக்கப்படுத்தும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெரிய மூன்று சக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரையும், எலக்ட்ரிக் ஆட்டோ மற்றும் எலக்ட்ரிக் கார் போன்ற சிறிய எலக்ட்ரிக் 3 சக்கர வாகனங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரையும் மானிய தொகை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.