இந்தியாவின் CBSE பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொது தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார். ஆனால் இது தொடர்பாக CBSE வாரியம் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இது குறித்து மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவலின் படி, 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு இரு முறை வாரிய தேர்வுகள் நடைபெறும்.

இதன் மூலமாக ஒரு முறை தேர்வில் தோற்றாலும் மற்றொரு முறை அதனை திருத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி கல்வி முறையில் பல மாற்றங்களை மத்திய அரசு அறிவித்தது. 2024 ஆம் ஆண்டு கல்வி அமர்வுக்கான பாட புத்தகங்களை உருவாக்குவதில், புதிய பாடத்திட்ட கட்டமைப்பை இணைத்தல் ஆகியவை மட்டுமல்லாமல் ஆண்டுக்கு இருமுறை தேர்வு அதில் அடங்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.