இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வீடியோக்களை பதிவு செய்து youtube மூலம் பணம் சம்பாதித்து வருகிறார்கள். பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் சமூக வலைத்தளங்களை அதிக அளவு பயன்படுத்தி பிரபலமாகி வருகிறார்கள். Youtube நிறுவனம் சமீபத்தில் அதன் யூட்யூபில் சப்ஸ்கிரைப் மற்றும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை தளர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு youtube இல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஆயிரம் பார்வையாளர்கள் மற்றும் ஓராண்டில் அவர்கள் சேனலில் அப்லோடு செய்யும் வீடியோவை நான்காயிரம் மணி நேரம் பார்த்திருக்க வேண்டும். மேலும் ஷார்ட்ஸ் வீடியோ என்றால் ஒரு மில்லியன் தாண்டினால் தான் பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் இனி அடுத்து வரும் காலங்களில் 500 சப்ஸ்க்ரைபர்ஸ் மட்டும் மூவாயிரம் மணி நேரம் வீடியோ பார்வை நேரம் இருந்தால் மட்டும் போதும் என அறிவித்துள்ளது. தற்போது இது அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்தியாவிற்குள் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.