தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி இறையியல், டார்வின் பரிணாம வளர்ச்சி, ஆபிரகாம் லிங்கனை சிறந்த ஜனநாயகவாதியாக காட்டுவது, ரூசோவின் சமூக ஒப்பந்த கோட்பாடு போன்றவைகள் இந்தியாவை அடிமைப்படுத்தும் செயல்களாகும் என்று தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு தற்போது எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் கே. பாலகிருஷ்ணனும் ஆளுநரின் பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்து ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதாவது ஆளுநர் ரவி தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை கூறி வருகிறார் எனவும் இனி ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும் முதல் கட்டமாக பிப்ரவரி 28-ம் தேதி ஆளுநர் மாளிகையின் முன்பாக கருப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்றும் பதிவிட்டுள்ளார்.
ஆளுநரின் அடாவடித்தனமான பேச்சு!
ஆர்.என். ரவி செல்லுமிடம் எல்லாம் கருப்புக் கொடி காட்டும் போராட்டம்!!முதல் கட்டமாக பிப்ரவரி 28 அன்று ஆளுநர் மாளிகை முன்பு கருப்புக் கொடி போராட்டம்!
சிபிஐ (எம்) அறைகூவல்!!!
— கே.பாலகிருஷ்ணன் – K Balakrishnan (@kbcpim) February 22, 2023