சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தால் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) வருடம் தோறும் நடத்தப்படும். இந்த நுழைவு தேர்வு அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளான எம்பிஏ, எம்சிஏ, எம்இ, ஏஎம்டெக், எம்ஆர்க், எம்பிளான் போன்ற படிப்புகளில் சேர்வதற்கு நடத்தப்படுகிறது. டான்செட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டும்தான் முதுநிலை படிப்புகளில் சேர முடியும்.

அதன் பிறகு பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இந்த வருடம் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு (சிஇஇடி-2023) நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இந்நிலையில் டான்செட் மற்றும் சிஇஇடி நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் நிறைவடையும் நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் கால அவகாசத்தை நீட்டித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி டான்செட் மற்றும் சிஇஇடி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் டான்செட் நுழைவு தேர்வு மார்ச் 25-ஆம் தேதியும், சிஇஇடி நுழைவுத் தேர்வு மார்ச் 26-ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது.