மத்திய அரசாங்கம் மக்கள் அனைவரும் பயன்படுத்தும் செல்போன்களில் இனி ஒரே மாதிரியான சார்ஜர் இருக்க வேண்டும் என்று விதியை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அதன்படி டைப் சி சார்ஜிங் போர்டு மட்டுமே இருக்க புதிய வழிகாட்டுதல்கள் அமலுக்கு வர இருக்கிறது. இதற்கு ஜூன் 2025 வரை காலக்கெடு உள்ளது. இனிமேல் நிறுவனங்கள் தங்களுடைய புதிய செல்போன் தயாரிப்புகளில் சி டைப் சார்ஜிங் போர்டு வைத்து மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் ஏற்கனவே இந்த விதியானது அமலுக்கு வந்துள்ளது. 2026 ஆம் வருடத்தின் இறுதியிலிருந்து  லேப்டாப்களுக்கும் இந்த விதிமுறை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.