அய்யா வைகுண்டர் அவதார தின விழாவை முன்னிட்டு மார்ச் 4ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு வருடமும் மார்ச் 4 ஆம் தேதி அய்யா வைகுண்டர் அவதார தின விழாவை முன்னிட்டு விடுமுறை விடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் வரும் மார்ச் 4 விடுமுறை அளிக்கப்படுகிறது.  இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 11ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுக்கு விடுமுறை பொருந்தாது என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.