தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் மலைப்பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து நாளை நீலகிரி, கோவை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது..