கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் பிடே கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 8 வீரர்கள் மற்றும் 8 வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ள நிலையில், ரவுன்ட் ராபின் முடிவில் முதலிடத்தை பெறுபவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனுடன் போட்டி போடும் வாய்ப்பை பெறுவார்.

இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற 13-வது போட்டியின் முடிவில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்த நிலையில், இன்று 14-வது சுற்றில்  அமெரிக்க வீரர் நகருராவுடன் போட்டி போட்டார். இந்த போட்டியை இந்திய வீரர் குகேஷ் டிரா செய்தார். இதன் மூலம் அவர் 9 புள்ளிகளை பெற்றார். இதேபோன்று பேபியானா காருனா-நெபோம்நியாச்சி இடையிலான போட்டியும் டிரா ஆனது. இதனால் குகேஷ் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இதன் மூலம் குகேஷ் இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் இவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் டிங் லிரெனுடன் விளையாட இருக்கிறார்.