பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம் என்று சொல்லப்படும் வந்தே பாரத் ரயில் சேவையானது இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்களை சென்னையில் உள்ள ஐசிஎஃப்எல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த வந்தே பாரத் ரயில் சேவை நாடு முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் விதமாக இயக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியவை.

இந்நிலையில் இதுவரை 7 வந்தே பாரத் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட நிலையில், தற்போது 8-வது வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட இருக்கிறது. மேலும் 8-வது வந்தே பாரத் ரயில் சேவையை ஜனவரி 19-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த வந்தே பாரத் ரயில் விஜயவாடா-செகந்திராபாத் வரை இயக்கப்பட இருக்கிறது.