பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. கடந்த 28 வருடங்களுக்கு முன்பாக வெளியான இந்தியன் படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்த நிலையில் அதை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்தியன் 2 போதிய வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 3 வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் நடிகைகள் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபிசிம்கா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தில் ஓடி டி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வருகின்ற 9-ம் தேதி வெளியாகிறது. மேலும் நாளை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.