நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும்போது எஸ்பிஐ வங்கியில் வட்டி விகிதமும் அதிகம் என்பதால் பெரும்பாலானோர் எஸ் பி ஐ வங்கியில் வாடிக்கையாளர்களாக இணைந்துள்ளனர்.
இந்த நிலையில் sbi வங்கி வாடிக்கையாளர்களிடம் ரிவார்ட் பாயிண்ட் என்ற பெயரில் சைபர் கிரைம் குற்றவாளிகள் மோசடி செய்து வருகின்றன. அக்கவுண்டில் ரிவார்ட் பாய்ண்டுகள் கிடைத்துள்ளதாகவும் அவற்றைப் பெற எஸ்பிஐ ரிவார்ட்ஸ் ஆப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் பயனர்களுக்கு ஒரு APK ஃபைல் அனுப்பப்படுகிறது. ஆனால் இது பொய் செய்தி என்றும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து பணத்தை இழக்க வேண்டாம் என்றும் PIB Fact check எச்சரித்துள்ளது.