சமீபகாலமாக உரிய மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்வது, மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்வது மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் மருந்துகள் விதிகள் 1945-ன் படி விதிமீறலாகும். அவ்வாறு விதிமீறல்கள் கண்டறியப்படும் மருந்துக்கடைகளின் உரிமங்கள் உடனடியாக ரத்துசெய்யப்படும்.

இந்நிலையில், மருத்துவரின் மருந்துசீட்டு இல்லாமல் மருந்துகளை விற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு இயக்குநரகம் எச்சரித்துள்ளது. இதுபற்றிய அறிவிப்பில், தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டைத் தடுக்க அனைத்து சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்களும், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மனநோய், தூக்க மருந்துகளை ரசீதுகளுடன் விற்பனை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.