நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தின் போது சீமான் நடிகர் விஜயை விமர்சித்தார். அதாவது நடிகர் விஜய்யின் கட்சி கொள்கைகளில் உடன்பாடு இல்லாததால் சீமான் கடுமையான வார்த்தைகளால் தாக்கி பேசினார். அவர் பேசியதாவது, திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா ப்ரோ. இந்த ஆட்டம் பூச்சாண்டி எல்லாம் என்கிட்ட காட்டாத. 2026 இல் என் ஆட்டத்தை யாராலும் சமாளிக்க முடியாது. விஜய் சொல்வது கொள்கை கிடையாது கூமுட்டை.
இது ஒன்னும் சினிமா பஞ்ச் டயலாக் அல்ல. நெஞ்சு டயலாக். ப்ரோ இது வெறும் டிரைலர் தான். மெயின் பிக்சர் எப்போது வரும் என்றால் அடுத்து உங்கள் படம் பார்த்த பிறகு மெயின் பிக்சர் வரும். வேலு நாச்சியார் படத்தை வைத்து விட்டால் போதுமா. வேலு நாச்சியார் யார் என்று சொல். ஆவின் பாலுக்கு பதிலாக ஆட்டுப்பால் கொடுப்பேன் என்று கூறினால் கூட பரவாயில்லை. கருப்பட்டிக்கு எப்படி பால் வரும் என்று கூறினார். மேலும் சீமான் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி தமிழக வெற்றிக்கழகத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.